தமிழ்நாடு (Tamil Nadu)

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் சிறப்பம்சங்கள்...

Published On 2023-12-30 10:16 GMT   |   Update On 2023-12-30 10:16 GMT
  • தினமும் 2,310 பேருந்துகளை இயக்கும் வகையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • முதல் அடித்தளத்தில் 260 கார்கள், 568 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.

வண்டலூர்:

வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருந்து நிலையத்தை சுற்றி பார்த்தார்.

இப்பேருந்து முனையத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்...

* கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.74 கோடி மதிப்பில் பேருந்து முனையம் திறப்பு.

* 130 அரசுப் பேருந்துகள், 85 ஆம்னி பேருந்துகளை நிறுத்தும் வசதி உள்ளது.

* 14 நடைமேடைகள், புற காவல்நிலையம், எஸ்கலேட்டர், லிப்ட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.



* தினமும் 2,310 பேருந்துகளை இயக்கும் வகையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

* முதல் அடித்தளத்தில் 260 கார்கள், 568 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.

* 2-வது அடித்தளத்தில் 84 கார்கள், 2,230 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.

* மருத்துவமனை, 4 உணவகங்கள் உள்ளிட்ட 100 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

* பயணச்சீட்டு வழங்கும் இடம், மருத்துவ மையம், தாய் பால் ஊட்டும் அறை, ஏடிஎம் அறைகள், 540 கழிப்பறைகள், ஓட்டுநர், நடத்துநர்கள் ஓய்வெடுக்கும் அறைகள் உள்ளன.

* 4 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 12 இடங்களில் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

Tags:    

Similar News