தமிழ்நாடு

முற்போக்குச் சிந்தனைகளால் தமிழினத்தை மீட்டவர் பேரறிஞர் அண்ணா- முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

Published On 2022-09-15 10:01 IST   |   Update On 2022-09-15 10:01:00 IST
  • 114-வது பிறந்த நாள் மதுரையில் அண்ணா சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து பின் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
  • நெல்பேட்டையில் அண்ணா சிலை அமைந்துள்ள பகுதியில் ஏராளமான தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அண்ணா பிறந்த நாளான இன்று பள்ளி மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இன்று தொடங்கி வைத்தார்.

முன்னதாக மதுரை ஏ.வி. பாலம்- நெல்பேட்டை சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு தமிழக அரசு சார்பில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவ படத்திற்கு மலர் தூவினார்.

முதல்-அமைச்சரை தொடர்ந்து அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, பெரியகருப்பன், பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி, கீதா ஜீவன், கணேசன், வெங்கடேசன் எம்.பி. உள்ளிட்டோரும் அண்ணா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு நெல்பேட்டையில் அண்ணா சிலை அமைந்துள்ள பகுதியில் ஏராளமான தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர். அப்போது சிலர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இதற்கிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் முன்னிட்டு பதிவிட்டிருந்தார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

"தம்பி! உன்னைத்தான் தம்பி..." என அரசியல் விழிப்புணர்வூட்டி, முற்போக்குச் சிந்தனைகளால் தமிழினத்தை மீட்ட அண்ணன் - ஈன்றெடுத்த தமிழன்னைக்குப் பெயர்சூட்டிய பெருமகன் - நம் தமிழ்நாட்டின் தலைமகன், பேரறிஞர் அண்ணா அவர்களை வணங்கி, என்றும் தமிழ்நாட்டு நலனுக்காக உழைத்திட உறுதியேற்போம்!

இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தது.

Tags:    

Similar News