கிண்டியில் பொங்கல் அன்று குதிரை பந்தயம்
- ஒவ்வொரு வருடமும் பொங்கல் அன்று டெர்பி பந்தயம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது.
- வெளிமாநிலங்களில் இருந்தும் இந்த பந்தயத்தில் குதிரைகள் கலந்து கொள்கிறது.
சென்னை:
கிண்டியில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பொங்கல் அன்று 'டெர்பி' பந்தயம் நடக்கிறது.
ஒவ்வொரு வருடமும் பொங்கல் அன்று டெர்பி பந்தயம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இந்த பந்தயத்தில் மொத்தம் 9 குதிரைகள் கலந்து கொள்கின்றன. வெளிமாநிலங்களில் இருந்தும் இந்த பந்தயத்தில் குதிரைகள் கலந்து கொள்கிறது.
டெர்பி பந்தயத்தில் ஜெயிக்கும் குதிரையின் உரிமையாளருக்கு ரூ.70 லட்சத்து 35 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும். 2-வது வரும் குதிரை யின் உரிமையாளருக்கு ரூ.27 லட்சமும், 3-வது வரும் குதிரையின் உரிமையாளருக்கு ரூ.11½ லட்சமும், 4-வது வரும் குதிரையின் உரிமையாளருக்கு ரூ.6 லட்சமும் வழங்கப்படும்.
இரண்டு நாட்கள் நடைபெறும் முக்கிய பந்தயங்கள்:-
1. டாஷ்மெஷ் ஸ்டெட் மில்லியன் ரூ.14½ லட்சம், 2. நனோலி ஸ்டெட் பில்லிஸ் கோப்பை ரூ.16½ லட்சம், 3. சென்னை ரேஸ் கிளப் கோப்பை ரூ.22 லட்சம். 4. பொங்கல் மில்லியன் கோப்பை ரூ.10½ லட்சம், 5. எம்.ஏ.எம்.ராமசாமி நினைவு கோப்பை ரூ.18 லட்சம். 6. உஷா ஸ்டெட் மில்லியன் கோப்பை ரூ.14½ லட்சம்.
இரண்டு நாட்கள் நடைபெறும் பந்தயத்தில் 14 ரேஸ்கள் நடைபெறுகிறது. எச் பி எஸ் எல் என்ற நிறுவனம் டெர்பி பந்தயத்திற்கு ஸ்பான்சர் செய்கிறது. இதன் உரிமையாளர் பிருத்வி ராஜி டெர்பி பந்தயத்தில் ஜெயிக்கும் உரிமையாளருக்கு கோப்பையை பரிசாக வழங்குவார்.
இந்த தகவலை ரேஸ் கிளப் செயலாளர் நிர்மல் பிரசாத் தெரிவித்தார். உடன் சீனியர் ஸ்டைபென்டிரி ஸ்டூவார்ட் வின்சன்ட் தன்ராஜ், உதவி ஸ்டைபென்டிரி ஸ்டுவார்ட் ஆர்.என்.வி.பி. குமார் உடன் இருந்தனர்.