தமிழ்நாடு

துணை முதலமைச்சர் உதயநிதியின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்

Published On 2024-10-02 08:33 GMT   |   Update On 2024-10-02 08:33 GMT
  • அமைச்சரவை கூட்டம் வருகிற 8-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை பிரதீப் யாதவ் வகித்துள்ளார்.

சென்னை:

தமிழக அமைச்சரவை சமீபத்தில் மாற்றப்பட்டது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் சில புதிய அமைச்சர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டது.

இதையடுத்து, அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட பிறகு முதல் அமைச்சரவை கூட்டம் வருகிற 8-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை பிரதீப் யாதவ் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News