தமிழ்நாடு
ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
- பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை, தேர்தல் நிலைபாடு குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது. கூட்டத்திற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பா.ம.க. அரசியல் பயிலரங்கத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், கவுரவ தலைவர் ஜி.கே. மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், மாநில பொருளாளர் திலகபாமா, மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. நிலைபாடு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.