தமிழ்நாடு
யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் கலாச்சார மையம்- கவர்னர் ஆர்.என்.ரவி வரவேற்பு
- “திருவள்ளுவர் கலாச்சார மையம்” என்று மறுபெயரிடுவது பிரதமர் மோடியின் மற்றொரு அடையாளமாகும்.
- இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பல்லாயிரம் ஆண்டு பழமையான கலாச்சார மற்றும் நாகரீக தொடர்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழ்மொழி மற்றும் பண்பாட்டின் வளர்ச்சியில் அதிக உந்துதலுடன் இந்தியா உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள புகழ் பெற்ற கலாச்சார மையத்தை "திருவள்ளுவர் கலாச்சார மையம்" என்று மறுபெயரிடுவது பிரதமர் மோடியின் மற்றொரு அடையாளமாகும்.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் பழமையான வாழும் மொழி மற்றும் கலாச்சாரமான தமிழின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பும் பணி நடந்து வருகிறது. இது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பல்லாயிரம் ஆண்டு பழமையான கலாச்சார மற்றும் நாகரீக தொடர்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.