தமிழ்நாடு

திமுகவில் இணைந்தார் சத்யராஜ் மகள்

Published On 2025-01-19 12:26 IST   |   Update On 2025-01-19 12:26:00 IST
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திவ்யா சத்யராஜ் தி.மு.க.வில் இணைந்தார்.
  • திவ்யா சமீப காலமாகவே தனது சமூக வலைத்தளங்களில் அரசியல் பதிவுகளை பகிர்ந்து வந்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நடிகர் சத்யராஜின் மகளும் – ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் தி.மு.க.வில் இணைந்தார்.

அதுபோது, கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

நடிகர் சத்யராஜ் திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது மகள் திவ்யா சமீப காலமாகவே தனது சமூக வலைத்தளங்களில் அரசியல் பதிவுகளை பகிர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News