தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு சுயேட்சை வேட்பாளர் டிஸ்மிஸ்- இபிஎஸ் அதிரடி

Published On 2025-01-19 15:27 IST   |   Update On 2025-01-19 15:27:00 IST
  • செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி வைப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.
  • ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளராக இருந்தவர் செந்தில் முருகன்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக அதிமுக நிர்வாகி செந்தில் முருகன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி வைப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.

ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளராக இருந்தவர் செந்தில் முருகன்.

அதிமுக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

ஆனால், தலைமை எடுத்த முடிவுக்கு மாறாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததால் கட்சியில் இருந்து செந்தில் முருகன் நீக்கம் செய்யப்படுவதாக இபிஎஸ் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News