தமிழ்நாடு

சென்னையில் ரேசன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க 25-ந்தேதி சிறப்பு முகாம்

Published On 2025-01-23 14:29 IST   |   Update On 2025-01-23 14:29:00 IST
  • சென்னையில் வருகிற 25-ந்தேதி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
  • பொது வினியோக திட்டம் தொடர்பான சேவைகள் குறித்தும் கோரிக்கைகள் இருந்தால் அவற்றையும் தெரிவிக்கலாம்.

உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ரேசன் கார்டுகளில் பெயர் சேர்ப்பு, நீக்கம் முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக சென்னையில் வருகிற 25-ந்தேதி (சனிக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

சென்னையில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் 12 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நடைபெற உள்ள இந்த முகாம்களில் பொது வினியோக திட்டம் தொடர்பான சேவைகள் குறித்தும் கோரிக்கைகள் இருந்தால் அவற்றையும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News