சில தலைவர்களின் தவறான வழிகாட்டுதலால் அரங்கேறும் கொடுஞ்செயல்கள் - அன்புமணி
- தொடர் சிகிச்சை பெற்று வந்த தமிழரசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- ராணிப்பேட்டை-திருமால்பூரில் காவல்துறைக்கு தெரிந்தே கஞ்சா விற்கப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் சூர்யா என்கிற தமிழரசன், விஜயகணபதி. இவர்களுக்கும் திருமால்பூரை சேர்ந்த பிரேம் என்பவருக்கும் முன் விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பிரேம், தமிழரசன் மற்றும் விஜயகணபதி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து தன் நண்பர்களுடன் தப்பிச் சென்றார். படுகாயமடைந்த தமிழரசன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 6 நாட்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், வன்முறை கும்பலால் துடிப்பான இளைஞர் துடிதுடிக்க எரிக்கப்பட்டு தற்போது உயிரை விட்டுள்ளார். ஒரு சில தலைவர்களின் தவறான வழிகாட்டுதலால் இந்த மாதிரியான கொடுஞ்செயல்கள் அரங்கேறுகின்றன.
ராணிப்பேட்டை-திருமால்பூரில் காவல்துறைக்கு தெரிந்தே கஞ்சா விற்கப்படுகிறது. நெல்வாயல் கிராமம் மட்டுமல்லாமல் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் அச்சத்தில் உள்ளது என கூறினார்.