தமிழ்நாடு

அண்ணாமலையின் கவன ஈர்ப்பு போராட்டம் எந்த மாற்றமும் இல்லாமல் நடைபெறும்- பா.ஜ.க. அறிவிப்பு

Published On 2024-12-27 03:59 GMT   |   Update On 2024-12-27 03:59 GMT
  • திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பும் அணிய மாட்டேன் என்று அண்ணாமலை கூறி இருந்தார்.
  • தமிழகம் முழுவதும் பல இடங்களில் இன்று நடைபெற இருந்த பா.ஜ.க. ஆர்ப்பாட்டங்கள் ரத்து.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவம் குறித்து நேற்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது,

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து சென்னையில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் செய்த முன்னாள் கவர்னரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர்.

ஒரே இடத்தில் கூட்டமாக வந்தால்தானே கைது செய்வீர்கள். இனி ஒவ்வொரு தொண்டர் வீட்டிற்கு முன்பும் போராட்டம் நடைபெறும்.

இன்று காலை 10 மணிக்கு ஒவ்வொருத்தர் வீட்டு முன் போராட்டம் நடத்த போகிறோம். என் வீட்டின் முன் நடைபெறும் போராட்டத்தில் எனக்கு நானே 6 முறை சாட்டையால் அடித்து கொள்வேன். பா.ஜனதா கட்சி தொண்டர்கள் யாரும் இதில் ஈடுபட வேண்டாம். நீங்கள் வீட்டிற்கு வெளியே வந்து நிற்பது உங்களது கடமை.

மேலும் 48 நாட்கள் விரதம் இருக்க போவதாக அறிவித்த அவர், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பும் அணிய மாட்டேன் என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் பல இடங்களில் இன்று நடைபெற இருந்த பா.ஜ.க. ஆர்ப்பாட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக பா.ஜ.க. அறிவித்துள்ளது. 

கோவையில் இன்று காலை 10 மணிக்கு அண்ணாமலையின் கவன ஈர்ப்பு போராட்டம் எந்த மாற்றமும் இல்லாமல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

Tags:    

Similar News