தமிழ்நாடு

புதிய மாவட்ட தலைவர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து

Published On 2025-01-19 18:55 IST   |   Update On 2025-01-19 19:55:00 IST
  • தமிழகத்தில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வழிகாட்டுதலின்படி நல்லாட்சியைக் கொண்டு வர வேண்டும்.
  • தேர்தலில் வெற்றிப்பெற்ற புதிய மாவட்ட தலைவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாஜக உட்கட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, தென்காசிக்கு ஸ்ரீதர் வேம்புவின் நெருங்கிய நண்பர் ஆனந்த் அய்யாசாமி, கோவை மேற்கு - சந்திரசேகர், நெல்லை வடக்கு முத்து பலவேசம், சேலம்- சசி. தேனி - ராஜபாண்டியன் உட்பட நீலகிரி, அரியலூர், காஞ்சி, குமரி, கடலூர், நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தேர்தலில் வெற்றிப்பெற்ற புதிய மாவட்ட தலைவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இகுதுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு பாஜகவின்

புதிய மாவட்டத் தலைவர்களாகப் பொறுப்பேற்றிருக்கும் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழகத்தில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி

அவர்கள் வழிகாட்டுதலின்படி நல்லாட்சியைக் கொண்டு வரவும், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நமது தமிழகத்தைக் கொண்டு செல்லவும், அயராது உழைக்க வேண்டும் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News