தமிழ்நாடு
புலி நகம், மான் கொம்பு வைத்திருந்த நபர் கைது - இன்ஸ்டா வீடியோவால் சிக்கிய தொழிலதிபர்
- 'கோயம்புத்தூர் மாப்பிள்ளை' என்ற பிரபல இன்ஸ்டா பக்கத்தில் வெளியான வீடியோ இணையத்தில் வைரலானது.
- பழகிருஷ்னன் வீட்டை சோதனையிட்ட வனத்துறையினர் மானின் கொம்புகளை பறிமுதல் செய்தனர்.
கோவையில் இன்ஸ்டா பிரபலம் எடுத்த வீடியோவில் மான்கொம்பு வைத்திருந்ததாக கூறிய பாலகிருஷ்ணன் என்ற நபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
'கோயம்புத்தூர் மாப்பிள்ளை' என்ற பிரபல இன்ஸ்டா பக்கத்தில், தான் புலி நகம் கொண்ட செயின் அணிந்திருப்பதாக தொழிலதிபர் பாலகிருஷ்ணன் பேட்டி கொடுத்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பாலகிருஷ்ணன் வீட்டை வனத்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது அவரது வீட்டில் இருந்து புள்ளி மானின் கொம்புகள் மற்றும் பாலகிருஷ்ணன் கழுத்தில் அணிந்திருந்த புலி நகத்தை வனத்துறையினர் கைப்பற்றினர். இதனையடுத்து பாலகிருஷ்ணனை வனத்துறையினர் கைது செய்தனர்.