தமிழ்நாடு

11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

Published On 2024-12-27 02:07 GMT   |   Update On 2024-12-27 02:07 GMT
  • தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து இருக்கிறது.
  • மேற்கு மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தெற்கு ஆந்திரா-வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து இருக்கிறது. இது மேலும் வலு குறைந்து அரபிக்கடல் பகுதிக்கு சென்றுவிடும். வலு குறைந்தாலும், அதன் ஈரப்பதம் ஆங்காங்கே காணப்படும் என்றே சொல்லப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக வருகிற 30-ந்தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாக 31-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் (ஜனவரி) 1, 2-ந்தேதிகளில் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் 11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Tags:    

Similar News