தமிழ்நாடு

நகராட்சியாகும் 'குமரி' பேரூராட்சி - டிசம்பர் கடைசி வாரம் 'திருக்குறள் வாரம்' : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Published On 2024-12-31 05:50 GMT   |   Update On 2024-12-31 07:50 GMT
  • குமரியில் படகு சவாரியை மேம்படுத்த 3 புதிய படகுகள் வாங்கப்படும்.
  • மாவட்டம் தோறும் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதன் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

* குமரி முனையில் முப்பால் புலவர் வள்ளுவருக்கு முத்தமிழறிஞர் வைத்த சிலைக்கு வெள்ளி விழா. தமிழின் பெருமையை குறளின் அருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் மகிழ்ச்சியை அடைந்த நாள் இன்று.

* வான் புகழ் வள்ளுவருக்கு வானுயர சிலை வைத்த மகிழ்ச்சி கலைஞருக்கு இருந்தது. வெள்ளிவிழா கொண்டாடிய பெருமை எனக்கு. அப்பா என்ன வைத்துவிட்டு போனார் எனக்கேட்போருக்கு தமிழகத்தின் குமரிமுனையில் உள்ள வள்ளுவர் சிலை பதில் சொல்லும்.

* வள்ளுவர் சிலை வைத்து 25 ஆண்டுகள் ஆனதற்கு பெரிய விழா எடுக்க வேண்டும் என்பதை சொன்னதற்கு விமர்சனம் எழுந்தது. அமைத்ததற்கு எதற்கு விழா என சில அதிமேதாவிகள் கேள்வி எழுப்பினர்.

* திருவள்ளுவர் தமிழகத்திற்கும், திருக்குறள் தமிழரின் பண்பாட்டுக்கும் அடையாளம் என்பதால் கொண்டாடுகிறோம். வள்ளுவரை கொண்டாடுவோம், கொண்டாடி கொண்டே இருப்போம்.

* அய்யன் வள்ளுவர் சிலை வெள்ளி விழா, விவேகானந்தர் மண்டபத்துடன் இணைக்கும் கண்ணாடி பாலம் திறக்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழுக்கும் உழைத்து கொண்டே இருப்பது வாழ்நாள் கடமை.

* ஆட்சிக்கு வரும் முன்னரே சட்டமன்றத்தில் வள்ளுவர் படம் திறக்க வைத்தவர் கலைஞர் கருணாநிதி. திருக்குறளாகவே வாழ்ந்தார் கலைஞர் கருணாநிதி.

* நமது மதம் குறள் மதம் என்றும் நமது நெறி குறள் நெறி என்றும் பெரியார் சொன்னார்.

*காமராஜர், மார்ஷல் நேசமணி, ஜி.யு.போப் பெயரில் படகுகள் வாங்கப்படும்.

* குமரியில் படகு சவாரியை மேம்படுத்த 3 புதிய படகுகள் வாங்கப்படும்.

*மாவட்டம் தோறும் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

*கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

* இனி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத கடைசி வாரம் திருக்குறள் வாரம் கொண்டாடப்படும் என்றார். 



Tags:    

Similar News