தமிழ்நாடு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Published On 2025-01-03 04:16 GMT   |   Update On 2025-01-03 04:16 GMT
  • இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.76 அடியாக இருந்தது.
  • தற்போது அணையில் 93.08 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

சேலம்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. மேட்டூர் அணையின் மூலம் காவிரி டெல்டாவில் 13 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதுதவிர பல்வேறு கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர்வரத்து அதிகரித்து கடந்த ஆண்டில் மேட்டூர் அணை 3 முறை நிரம்பியது. இதனால் அணையில் தண்ணீர் கடல் போல் தேங்கி நிற்கிறது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.76 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு நேற்று 1871 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 1992 கனஅடியாக அதிகரித்து வந்து கொண்டுஇருக்கிறது. இது தவிர நேற்று இரவு டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தொடர்ந்து 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.08 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

Similar News