கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள்: 30 குழுக்கள் அமைத்து தீவிர கண்காணிப்பு
- பொங்கல் பண்டிகையை யொட்டி சிறப்பு பஸ்கள்.
- முன்பதிவு டிக்கெட் முழுவதும் விற்றுத்தீர்ந்து விட்டன.
சென்னை:
பொங்கல் பண்டிகையை யொட்டி சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
வழக்கமான ரெயில்கள் மற்றும் சிறப்பு ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட் முழுவதும் விற்றுத்தீர்ந்து விட்டன. இந்த நிலையில் பொதுமக்கள் பலர் ஆம்னி பஸ்களை நாடுவது வழக்கம்.
பொங்கல் பண்டிகையை யொட்டி பயணிகள் நெரி சலை கருத்தில் கொண்டு ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படு வதை தடுக்கவும், விதிமீ றல்களில் ஈடுபடும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், 30 சிறப்பு குழுக்களை போக்குவரத்து ஆணையரகம் அமைத்து உள்ளது.இதுகுறித்து தமிழக போக்குவரத்து துறை ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:-
தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், ஆம்னி பஸ்கள் அதிகமாக இயக்கப்படும். பொங்கல் பண்டிகை நெருங்க உள்ள தால் ஆம்னி பஸ்கள் அதிக அளவில் இயக்கப்பட உள்ளது. மேலும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். வரி நிலுவை, அதிக சுமை, பர்மிட் இல்லாமல் இயக்குவது போன்ற விதிமீறல்களும் காணப்படும்.
இதுகுறித்து சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குழுவி லும் 3 பேர் இருப்பார்கள். அடுத்த வாரம் முதல் இந்த சிறப்பு குழுக்கள் செயல்படும்.
இந்த குழுவினர் நெடுஞ் சாலை மற்றும் முக்கிய பஸ் நிலையங்களில் திடீர் சோதனை நடத்துவார்கள். ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தாலோ, விதிமீறல்கள் காணப்பட் டாலோ அபராதம் விதிக்கப் படும். மேலும் பஸ்களின் அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.