தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டிடம் - சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- அயப்பாக்கத்தில் புதிய தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான அவசியம் ஏற்படவில்லை.
- தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 72 காவல் நிலையங்கள், 23 தீயணைப்பு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்றைய அலுவல்கள் தொடங்கின. உறுப்பினர்களின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து வருகிறார். அப்போது உறுப்பினர் ராமச்சந்திரன் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
அறந்தாங்கி தொகுதி ஆவுடையார்கோவில் தீயணைப்பு, மீட்பு பணிகள் நிலையத்திக்கு புதிய கட்டிடம் கட்டப்படும். ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு ரூ.2.59 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மே மாதம் பணிகள் தொடங்கும். ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலைய புதிய கட்டுமான பணி அடுத்தாண்டு பிப்ரவரியில் முடிக்கப்படும்.
அயப்பாக்கத்தில் புதிய தீயணைப்பு நிலையம் அமைப்பதற்கான அவசியம் ஏற்படவில்லை. அறந்தாங்கி காவல் நிலையத்தை 2-ஆக பிரித்து புதிய காவல்நிலையம் அமைப்பதற்கான அவசியம் இல்லை.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 72 காவல் நிலையங்கள், 23 தீயணைப்பு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றார்.