தமிழ்நாடு

முதலமைச்சர் நாளை தூத்துக்குடி வருகை- கட்சியினர் திரளாக கலந்து கொள்ள அமைச்சர் அழைப்பு

Published On 2024-12-28 04:22 GMT   |   Update On 2024-12-28 04:22 GMT
  • மாணிக்கம் மகாலில் நடைபெறும் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்கிறார்.
  • புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி, கன்னியாகுமரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி வருகிறார்.

இதுதொடர்பாக தி.மு.க. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி மாநகரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடிக்கு வருகிறார். அவர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள நியோ டைடல் பார்க்கை திறந்து வைக்கிறார்.

மாலை 5 மணிக்கு மாணிக்கம் மகாலில் நடைபெறும் தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

நிகழ்ச்சி முடித்து காமராஜர் சாலை, போல்டன்புரம், தேவர்புரம் ரோடு, தென்பாகம் போலீஸ் நிலையம், பாளையங்கோட்டை ரோடு, 3-வது மைல் வழியாக சத்யா ரிசாட் செல்கிறார்.

மறுநாள் (திங்கட்கிழமை) காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, காமராஜ் கல்லூரியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

நிகழ்ச்சி முடிந்து சிவந்தாகுளம் ரோடு, பக்கிள்புரம், புதுகிராமம், வி.இ.ரோடு, அண்ணா சாலை, பாளையங்கோட்டை ரோடு வழியாக கன்னியா குமரி புறப்பட்டு செல்கிறார்.

எனவே அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News