மாணவிகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் வதந்திகளை பரப்ப வேண்டாம்- உதயநிதி ஸ்டாலின்
- இன்று நள்ளிரவே தமிழக வீராங்கனைகளை டெல்லி அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- தமிழக வீராங்கனைகள் டெல்லியில் தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தின் 36 வீராங்கனைகள் உட்பட 42 பேர் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தேசிய கபடி போட்டியில் பங்கேற்க பஞ்சாப் சென்றுள்ளனர்.
போட்டியில் விதிகளை மீறியதாக முறையிட்ட தமிழக வீராங்கனைகள், தமிழக பயிற்சியாளர் பாண்டியன் மீது பீகார் போட்டியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்ட செய்தி அறிந்த உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவிகள் தாக்கப்பட்ட விவகாரத்தில் வதந்திகளை பரப்ப வேண்டாம். தமிழக மாணவிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர்.
இன்று நள்ளிரவே தமிழக வீராங்கனைகளை டெல்லி அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வீராங்கனைகள் டெல்லியில் தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வெளிமாநிலம் செல்லும் தமிழக விளையாட்டு வீராங்கனைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்.
மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தமிழக வீராங்னைகளை உடனடியாக பாதுகாத்தோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.