தமிழ்நாடு
நம்மை எதிர்க்கும் கட்சி அ.தி.மு.க.வாகத் தான் இருக்கும்- அமைச்சர் துரைமுருகன்
- டெய்லி வரும் சின்ன சின்ன கட்சிகள் திருவிழாவில் வரும் வாணவேடிக்கை போல.
- இது கட்சி. அது கூட்டம். உயிரை கொடுப்பது இது.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:
* டெய்லி வரும் சின்ன சின்ன கட்சிகள் திருவிழாவில் வரும் வாணவேடிக்கை போல...
* இது கட்சி. அது கூட்டம். உயிரை கொடுப்பது இது. தலைமுடியை கூட (சைகையில்) கொடுக்க மாட்டார்கள். அதனால் அவர்களை பற்றி எல்லாம் பேசுறதும் கிடையாது. பேச வேண்டிய அவசியமும் கிடையாது.
* தேர்தல் வர வர எல்லா கட்சியும் கரைந்து போய்விடும்; நம்மை எதிர்க்கும் கட்சி அ.தி.மு.க.வாகத் தான் இருக்கும். அவர்களை எதிர்க்கும் சக்தி நம்மிடம் உண்டு. மீண்டும் தி.மு.க. தான் என்று கூறினார்.