எங்கள் மீது நீங்கள் கரிசனை காட்ட வேண்டாம்- அமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி பதில்
- அதிக கடன் வாங்கியது தான் தி.மு.க. அரசின் சாதனை.
- எந்த புதிய திட்டத்தையும் தொடங்காமல் புள்ளி விபரங்களை மட்டுமே சொல்லி சமாளிக்கின்றனர்.
சென்னை:
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் 4 ஆண்டுகளில் 4 லட்சத்து 52 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது.
* 5 ஆண்டு தி.மு.க. ஆட்சி நிறைவில் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கும்.
* சதவீத அடிப்படையில் கூறி நிதி அமைச்சர் சமாளித்து கொண்டிருக்கிறார்.
* கடனை குறைத்து வருவாய் அதிகரிக்கப்படும் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது.
* தி.மு.க. ஆட்சி அமைத்த நிதி மேலாண்மை குழு 4 ஆண்டுகளில் என்ன அறிக்கை சமர்பித்துள்ளது. நிதி மேலாண்மை குழு அமைத்த பின்னர் தான் 4.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளது.
* மாநில அரசின் வரி வருவாய் 1 லட்சத்து ஓராயிரம் கோடி ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளது.
* மத்திய அரசின் வரி பகிர்வில் 33 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளது.
* மூலதன செலவு வெறும் 57 ஆயிரம் கோடி ரூபாய் என்று தான் கணக்கிடப்பட்டுள்ளது.
* அரசின் கடன் தொடர்பான வெள்ளை அறிக்கை கேட்டோம், அதையும் தி.மு.க. அரசு வெளியிடவில்லை.
* அதிக கடன் வாங்கியது தான் தி.மு.க. அரசின் சாதனை.
* எந்த புதிய திட்டத்தையும் தொடங்காமல் புள்ளி விபரங்களை மட்டுமே சொல்லி சமாளிக்கின்றனர்.
* பட்ஜெட் கணக்கை சரியாக செய்யுங்கள், எங்களது கணக்கை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.
* ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறாம். எங்கள் மீது நீங்கள் கரிசனை காட்ட வேண்டாம். அ.தி.மு.க. தன்மானத்தை இழக்காது என்றார்.