தமிழ்நாடு
மேகமலை புலிகள் சரணாலய வனத்துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
- சின்னமனூர் தென் பழநி வன சோதனை சாவடியில் விவசாயிகள் போராட்டம்.
- அரசு நாற்று பண்ணையில் கிடைக்கும் காபி, ஏல நாற்றுகளை செக்போஸ்டில் தடுக்கப்படுகிறது.
மேகமலை புலிகள் சரணாலய வனத்துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் இன்று போராட்டம் நடத்தினர்.
பட்டா விவசாய பூமியில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்புக்கு குடிநீர் வசதி செய்யவும், பழுது அடைந்த குடியிருப்புகளை சரி செய்ய தேவையான உபகரணங்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு இருப்பது, அரசு நாற்று பண்ணையில் கிடைக்கும் காபி, ஏல நாற்றுகளை செக்போஸ்டில் தடுப்பது, பட்டா விவசாயிகள் ஏலம், தேயிலை, காபி ஸ்டோர்களை பழுது பார்க்க தடை செய்வது உள்பட பல செயல்களை கண்டித்து மேகமலை விவசாயிகள் இன்று போராட்டம் நடத்தினர்.
சின்னமனூர் தென் பழநி வன சோதனை சாவடியில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் விவசாயிகள் மற்றும் எஸ்டேட் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். விடியலை மறைக்கும் மேகமலை புலிகள் சரணாலய வனத்துறை அதிகாரிகளை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.