தமிழ்நாடு
தமிழகத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
- நாள்தோறும் நடைபெறும் குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.
- குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் ஆங்காங்கே தொடர்ந்து கொலைகள் நடைபெறுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
நாள்தோறும் நடைபெறும் குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.
குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு சட்டம் ஒழுங்கை கடுமையாக்கி, காவல் துறையினரின் பணியை முறைப்படுத்தி, போதைப்பொருட்களை ஒழித்து, மாணவர்கள், இளம் சமுதாயத்தினர், மகளிர், முதியோர் என அனைவருக்குமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.