தமிழ்நாடு
கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு எனும் மெகா நாடகம்- அண்ணாமலை கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு எனும் மெகா நாடகம்- அண்ணாமலை கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

Published On 2025-03-22 10:15 IST   |   Update On 2025-03-22 10:15:00 IST
  • முதலமைச்சர் ஸ்டாலினைக் கண்டித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று நேற்று அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.
  • பனையூரில் உள்ள தனது இல்லத்தின் வெளியே பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை:

தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் ஸ்டாலின் அவர்களைக் கண்டித்து, நாளை (இன்று) தமிழக பாஜக சார்பில், கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும். தமிழக பாஜக சகோதர சகோதரிகள் அனைவரும் நாளை (இன்று) காலை 10 மணிக்கு, அவரவர் வீட்டு முன்பாக நின்று தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் கர்நாடக, கேரள மாநிலத் தலைவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் முதலமைச்சர் ஸ்டாலினைக் கண்டித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று நேற்று அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.

அதன்படி, இன்று சென்னை அடுத்த பனையூரில் உள்ள தனது இல்லத்தின் வெளியே பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தில் கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு எனும் மெகா நாடகம் என்ற பதாகையை கையில் ஏந்தி அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 

Tags:    

Similar News