தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா சந்திப்பு பற்றிய கேள்வி.. ஒரே வார்த்தையில் பதிலளித்த ஓ.பி.எஸ்.
- பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது.
- சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இவர்களின் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது.
பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சட்டசபைக்கு வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம், டெல்லியில் அமித்ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம், "எல்லாம் நன்மைக்கே" என்று கூறினார்.