தமிழ்நாடு

கனமழை... திருவள்ளூர் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

Published On 2024-12-12 02:25 GMT   |   Update On 2024-12-12 02:25 GMT
  • புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
  • ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுலவர் தெரிவித்துள்ளார்.

தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நேற்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், திருவாரூர், சேலம், காஞ்சிபுரம், அரியலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வேலூர் திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த பருவ தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுலவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News