தமிழ்நாடு
ஆடு உள்ளே வரும், வெளியே போக முடியாது- அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்த செந்தில் பாலாஜி
- ஆயிரக்கணக்கான ஆடுகளை அறுத்து குர்பானி கொடுத்தால் அது பக்ரீத் காலம்.
- ஒரே ஒரு ஆட்டை அறுத்து கொத்துக்கறி போட்டால் அது தேர்தல் காலம்.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய செந்தில் பாலாஜி, "ஆயிரக்கணக்கான ஆடுகளை அறுத்து குர்பானி கொடுத்தால் அது பக்ரீத் காலம். அதுவே ஒரே ஒரு ஆட்டை அறுத்து கொத்துக்கறி போட்டால் அது தேர்தல் காலம்
எத்தனை ஆடுகள் வந்தாலும் பள்ளபட்டிக்கு உள்ளேயும் வரமுடியாது, வந்துவிட்டால் வெளியேயும் செல்ல முடியாது என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறீர்கள். உங்கள் ஆதரவை எங்களுக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.