13 நாடுகளில் சிம்பொனி நிகழ்ச்சி நடத்த ஒப்பந்தம் - இளையராஜா
- தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டதை எண்ணி பெருமைப்படுகிறேன்.
- சிம்பொனி இசை நிகழ்ச்சியை டவுன்லோடு செய்து கேட்காதீர்கள்.
லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்திய இசைஞானி இளையராஜா இன்று சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக உற்வேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, இளையராஜாவை வரவேற்றார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த இசைஞானி இளையராஜா, அனைவருக்கும் நன்றி. மிகவும் மகிழ்வான இதயத்தோடு மலர்ந்த முகத்தோடு நீங்கள் என்னை வழியனுப்பி வைத்ததே இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த இறைவன் அருள்புரிந்தார். இது ஒரு சாதாரண விஷயம் அல்ல. எனது சிம்பொனி இசையை மூச்சுவிட மறந்து ரசிகர்கள் ரசித்தனர்.
ரசிகர்களின் வாழ்த்தே இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிம்பொனி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த முடிந்தது. தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டதை எண்ணி பெருமைப்படுகிறேன். 13 நாடுகளில் சிம்பொனி நிகழ்ச்சி நடத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. லண்டன் சிம்பொனி இசை நிகழ்ச்சியை டவுன்லோடு செய்து கேட்காதீர்கள் என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.