தமிழ்நாடு
தமிழ் காக்க - தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட விரைவில் முக்கிய அறிவிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- இருமொழிக் கொள்கை என்பது நம் உயிர்க் கொள்கை!
- இது பணப்பிரச்சினை அல்ல; இனப் பிரச்சினை!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
நிதிக்காக இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறும் கொத்தடிமைகளின் ஆட்சியல்ல இது; தடைக்கற்களை உடைத்தெறியும் தடந்தோள்கள் கொண்ட திராவிட மாடல் ஆட்சி இது!
இருமொழிக் கொள்கை என்பது நம் உயிர்க் கொள்கை!
இது பணப்பிரச்சினை அல்ல; இனப் பிரச்சினை!
தமிழ் காக்க - தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட - தமிழினம் உயர - மாநில சுயாட்சியை உறுதிசெய்ய விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.