தமிழ்நாடு

தமிழக போலீஸ் துறையில் 28 போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து

Published On 2025-01-22 05:15 IST   |   Update On 2025-01-22 05:15:00 IST
  • 28 பேருக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கி ஏற்கனவே தமிழக அரசு அறிவிப்பு வெளிட்டது.
  • டி.செந்தில்குமார், மகேந்திரன், சுப்புலட்சுமி, ராஜன், செல்வராஜ், ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்

சென்னை:

தமிழக போலீஸ் துறையில் சூப்பிரண்டுகளாக பணியாற்றும் 28 பேருக்கு ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கி ஏற்கனவே தமிழக அரசு அறிவிப்பு வெளிட்டது.

தற்போது அந்த 28 போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கியதற்கான ஆணையை மத்திய அரசு வெளியிட்டது.

அந்த ஆணையில் ஈஸ்வரன், மணி, செல்வக்குமார், டாக்டர் சுதாகர், எஸ்.ஆர்.செந்தில்குமார், முத்தரசி, பரோஸ்கான் அப்துல்லா, ராமகிருஷ்ணன், சக்திவேல், நாகஜோதி, சுகுமாரன், ராஜராஜன், விமலா, சுரேஷ்குமார், பாஸ்கரன், சண்முக பிரியா, ஜெயக்குமார், மயில்வாகணன், ஜெயலட்சுமி, சுந்தர வடிவேல், உமையாள், எஸ்.சரவணன், டி.செந்தில்குமார், மகேந்திரன், சுப்புலட்சுமி, ராஜன், செல்வராஜ், ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News