தமிழ்நாடு
இருமொழி கொள்கை.. அண்ணாவின் குரலில் மிமிக்ரி செய்து மத்திய அரசை எச்சரித்த ஜெயக்குமார்
- விருப்பப்பட்ட மொழியை யார் வேண்டுமானாலும் கற்றுகொள்ளலாம். ஆனால் ஒரு மொழியை திணிக்க கூடாது.
- தமிழகத்தில் மொழிப் போரால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "ஒருமொழி கொள்கை தான் அதிமுகவின் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை. விருப்பப்பட்ட மொழியை யார் வேண்டுமானாலும் கற்றுகொள்ளலாம். ஆனால் ஒரு மொழியை திணிக்க கூடாது. தமிழகத்தில் மொழிப் போரால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.
இதனிடையே அண்ணாவின் குரலில் மிமிக்ரி செய்த ஜெயக்குமார், வடநாட்டு நண்பர் ஒருவர் என்னிடம் பேசும்போது சொன்னார்கள். இந்தி மொழியை 3 மாதத்திலேயே நீங்கள் கற்றுக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். நான் சொன்னேன். இந்திய மொழியை 3 மாதத்தில் கற்றுக்கொள்ளலாம். அதற்கு மேல் கற்றுக்கொள்வதற்கு அதில் என்ன இருக்கிறது" என்று பேசினார்.