சென்னை ஐஐடியில் காமராஜர் சிலை திறப்பு
- சென்னை ஐ.ஐ.டியை கொண்டு வருவதற்காக காரணமாக இருந்த காமராஜருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
- பல்வேறு ஆராய்ச்சி பணிகளையும், அங்குள்ள தொழில்நுட்ப ஆய்வகங்களையும் பொதுமக்கள் நேரில் சென்று பார்வையிட முடியும்.
இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனங்களில் ஒன்று சென்னை ஐஐடி. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் மார்பளவு சிலையை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி திறந்து வைத்தார்.
சென்னை ஐ.ஐ.டியை கொண்டு வருவதற்காக காரணமாக இருந்த காமராஜருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஜனவரி 3, 4-ம் தேதிகளில் ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி மையங்களையும் ஆய்வகங்களையும் பார்வையிடலாம் என பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
'அனைவருக்கும் சென்னை ஐஐடி' என்ற சிறப்பு திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஐஐடி வளாகத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். இதன்மூலம் ஐஐடி-யில் நடைபெறும் பல்வேறு ஆராய்ச்சி பணிகளையும், அங்குள்ள தொழில்நுட்ப ஆய்வகங்களையும் பொதுமக்கள் நேரில் சென்று பார்வையிட முடியும்.