இன்று பிறந்த நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கனிமொழி எம்.பி. வாழ்த்து பெற்றார்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கை கொடுத்து காலை தொட்டு கும்பிட்டு ஆசிபெற்ற கனிமொழிக்கு பொன்னாடை போர்த்தி அவர் வாழ்த்து தெரிவித்தார்.
- தி.மு.க. நிர்வாகிகள், மகளிர் அணியினர், கட்சிப் பிரமுகர்கள் ஏராளமானோர் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை:
பாராளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. இன்று தனது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு சென்று சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து பெற்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கை கொடுத்து காலை தொட்டு கும்பிட்டு ஆசிபெற்ற கனிமொழிக்கு பொன்னாடை போர்த்தி அவர் வாழ்த்து தெரிவித்தார். அப்போது துர்கா ஸ்டாலின் உடன் இருந்து கனிமொழியை வாழ்த்தினார்.
முன்னதாக மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு சென்று கனிமொழி எம்.பி. மரியாதை செலுத்தினார். அதன் பிறகு ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு சென்றார். அங்கு தி.மு.க. நிர்வாகிகள், மகளிர் அணியினர், கட்சிப் பிரமுகர்கள் ஏராளமானோர் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.ஆர்.பெரியகருப்பன் பங்கேற்று தங்க மோதிரம், குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்குகிறார்கள். இதில் மாவட்ட கழக செயலாளர் நே.சிற்றரசு, பகுதி கழக செயலாளர்கள் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், மதன் மோகன், விக்டர், வி.எஸ்.கலை, அகஸ்டின் பாபு, சங்கீதா, கமலா செழியன் மற்றும் மகளிர் அணியினர் பங்கேற்கின்றனர்.