தமிழ்நாடு

ஆதிக்க திணிப்புகளுக்கு அஞ்சாமல் அன்னைத்தமிழைக் காக்க உறுதியேற்போம்- கனிமொழி

Published On 2025-02-21 14:32 IST   |   Update On 2025-02-21 15:04:00 IST
  • வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே!
  • உலக மொழிக்கெல்லாம் ஒளிதரும் செம்மொழியாக உதிரத்தில் கலந்துவிட்ட தாய்த்தமிழை போற்றி வணங்கிடுவோம்.

உலகத் தாய்மொழி தினத்தையொட்டி கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி

வாழிய வாழியவே!

வான மளந்த தனைத்தும் அளந்திடும்

வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!

என்றென்றும் வாழியவே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்

துலங்குக வையகமே!

தொல்லை வினை தரு தொல்லை யகன்று

சுடர்க தமிழ்நாடே!

உயிராக, வாழ்வியல் நெறியாக, அறமாக, சினமாக, சிந்தனை மொழியாக, அறிவியல் வழியாக, தமிழரின் தனிப்பெரும் உணர்வாக, உலக மொழிக்கெல்லாம் ஒளிதரும் செம்மொழியாக உதிரத்தில் கலந்துவிட்ட தாய்த்தமிழை போற்றி வணங்கிடுவோம். ஆதிக்க திணிப்புகளுக்கு அஞ்சாமல் அன்னைத்தமிழைக் காக்க உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News