தமிழ்நாடு

மாணவி வன்கொடுமை வழக்கு- இன்றே விசாரிப்பதாக சென்னை ஐகோர்ட் அறிவிப்பு

Published On 2024-12-27 05:46 GMT   |   Update On 2024-12-27 06:09 GMT
  • சூமோட்டா வழக்காக எடுக்குமாறு வரலட்சுமி அனுப்பிய கடிதத்தை நீதிபதிகள் சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு ஏற்றது.
  • சென்னை காவல் ஆணையர், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை இன்றே விசாரிக்குமாறு வரலட்சுமி என்ற வழக்கறிஞர் நீதிபதிகளிடம் முறையிட்டார். 

சூமோட்டா வழக்காக எடுக்குமாறு வரலட்சுமி அனுப்பிய கடிதத்தை நீதிபதிகள் சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு ஏற்றது.

இதையடுத்து இந்த வழக்கை இன்றே விசாரிப்பதாக சென்னை ஐகோர்ட் அறிவித்துள்ளது.

சென்னை காவல் ஆணையர், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், கோட்டூர்புரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டுள்ளது.

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் மட்டுமின்றி அது தொடர்பான எப்.ஐ.ஆர். வெளியானது குறித்தும் இன்றே விசாரிக்கப்பட உள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்று பிற்பகல் 2.15-க்கு நடைபெற உள்ளது.

Tags:    

Similar News