தமிழ்நாடு
ஊடகங்கள் எதிரிகள் அல்ல! - அரசு அதிகாரிகளின் நேர்மை, வெளிப்படைத்தன்மை குறித்தும் உயர்நீதிமன்றம் கேள்வி
- ஊடக சுதந்திரத்தை தடுக்க முடியாது. ஊடகங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
- அரசு அதிகாரிகள் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் இருப்பதில் என்ன சிரமம் உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான அறிக்கை சீலிடப்பட்ட கவரில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை தொடங்கியது.
விசாரணையின்போது, மாணவி தொடர்பான எப்.ஐ.ஆரை பொதுவெளியில் வெளியிட்டது மீடியாதான் என்று அரசு தலைமை வழக்கறிஞர் கூறினார்.
இதுதொடர்பாக ஐகோர்ட் நீதிபதிகள் கூறுகையில்,
* ஊடக சுதந்திரத்தை தடுக்க முடியாது. ஊடகங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
* ஊடகங்களால் தான் இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன, ஊடகங்கள் எதிரிகள் அல்ல.
* பத்திரிகைகள் தவறாக திரித்து வெளியிட்டு விட்டதாக கூறக்கூடாது.
* அரசு அதிகாரிகள் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் இருப்பதில் என்ன சிரமம் உள்ளது என கேள்வி எழுப்பினர்.