மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் தந்தை காலமானார்- அரசியல் தலைவர்கள் இரங்கல்
- இறுதி மரியாதை சடங்குகள் இன்று மாலை ஹார்விபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சு.வெங்கடேசனின் தந்தை மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மதுரை பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருப்பவர் சு.வெங்கடேசன். இவர் ஒரு எழுத்தாளரும் ஆவார். மாணவப் பருவத்தில் இருந்து இந்திய மார்க்சிஸ்ட் கட்சியில் பணியாற்றி வரும் இவர் 2-வது முறையாக எம்.பி. பதவி வகித்து வருகிறார். இதனிடையே மத்திய அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்கள் மற்றும் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறார்.
இவர் எழுதிய 'காவல் கோட்டம்' என்ற நாவலின் முக்கிய பகுதிகளை தழுவியே 2012-ம் ஆண்டு 'அரவான்' படம் வெளியானது. இதனை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் எழுத்தாளராக பணியாற்றி உள்ளார்.
இந்த நிலையில், மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் தந்தை இரா.சுப்புராம் (79) இன்று அதிகாலை காலமானார். இறுதி மரியாதை சடங்குகள் இன்று மாலை ஹார்விபட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சு.வெங்கடேசனின் தந்தை மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.