தமிழ்நாடு
மயிலாடுதுறை - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் சுவாமிமலையில் நின்று செல்லும்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
- சுவாமிமலை ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
- தற்காலிகமாக சுவாமிமலை ரெயில் நிலையத்தில் இன்று (புதன்கிழமை மட்டும்) ஒரு நிமிடம் நின்று செல்லும்.
சென்னை:
தைப்பூசத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16847), மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16848), தற்காலிகமாக சுவாமிமலை ரெயில் நிலையத்தில் இன்று (புதன்கிழமை மட்டும்) ஒரு நிமிடம் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.