தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்- சட்டப்படி குற்றவாளி கைது செய்யப்பட்டு விசாரணை: அமைச்சர் கோவி.செழியன்

Published On 2024-12-27 05:20 GMT   |   Update On 2024-12-27 05:20 GMT
  • தேசிய மகளிர் ஆணைய விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழக அரசு அளிக்கும்.
  • அனைத்து இடங்களிலும் மின் விளக்கு பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

சென்னை :

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* தேசிய மகளிர் ஆணைய விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழக அரசு அளிக்கும்.

* அண்ணா பல்கலைக்கழகத்தில் துரதிருஷ்டவசமாக எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது. எதிர்பாராத இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் மாணவிகள் கல்லூரி கமிட்டியிடம் தாமாக வந்து புகார் அளிக்க வேண்டும்.

* வேறு எதுவும் கிடைக்காததால் அரசியல் கட்சியினர் மாணவி வன்கொடுமை சம்பவத்தை அரசியல் ஆக்குகின்றனர்.

* மாணவி வன்கொடுமை விவகாரத்தில் திமுக அரசியல் ஆக்க விரும்பவில்லை.

* சட்டத்தின்படி குற்றவாளி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

* அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் முட்புதர்களை அகற்றும் பணியும் அனைத்து இடங்களிலும் மின் விளக்கு பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது என்றார்.

Tags:    

Similar News