சீமான் மீதான பாலியல் வழக்கு - 'ஒரு வரி' பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு
- எதிர்த்து நின்ற அனைவரையும் முன்ஜாமின் வைப்புத் தொகையை இழக்க வைத்துள்ளார்கள்.
- எங்களுடைய லட்சிய பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
சென்னை :
நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார் வழக்கில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஆஜராகாததால் இன்று காலை 11 மணிக்கு நீங்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். தவறினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, தருமபுரியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளதால் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன் என்று சீமான் நேற்று தெரிவித்து இருந்தார்.
சீமான் இன்று போலீசார் விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை என்றால் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், சீமான் மீதான பாலியல் வழக்கில் சட்டம் தன் கடமையை செய்யும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சீமான் பெரியார் குறித்து பேசிய பிறகு தான் ஈரோடு மண் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு சொந்தம் என்று அந்த மக்கள் தீர்ப்பு அளித்திருக்கிறார்கள். எதிர்த்து நின்ற அனைவரையும் முன்ஜாமின் வைப்புத் தொகையை இழக்க வைத்துள்ளார்கள். ஆகவே அவர் இன்னும் கூட பேசட்டும். இன்னும் இன்னும் நாங்கள் எங்கள் பணியின் வேகத்தை பலமாக்குவோம். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அறுதி பெரும்பான்மையோடு முதலமைச்சர் சொல்லிய 200 தாண்டி அவரை ஆட்சிக்கட்டிலில் மக்கள் அமர வைப்பார்கள். இதுபோன்ற ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் கடந்து வந்த இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம். இதுபோன்று பின்னால் பேசுபவர்கள் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்களுடைய லட்சிய பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றார்.