தமிழ்நாடு

தமிழக பட்ஜெட்: அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய அமைச்சர் தங்கம் தென்னரசு

Published On 2025-03-14 08:40 IST   |   Update On 2025-03-14 08:40:00 IST
  • இந்த பட்ஜெட்டில் மக்களை கவருவதற்கான பல்வேறு திட்டங்கள் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதால், மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • தமிழக பட்ஜெட் நிகழ்வை மாநிலம் முழுவதும் 936 இடங்களில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. சட்டசபையில் இன்று கூடும் முதல் நாள் கூட்டத்தில் காலை 9.30 மணிக்கு 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். 2025-26-ம் நிதியாண்டில் தமிழக அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களை அவர் அவைக்கு அளிப்பார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் மக்களை கவருவதற்கான பல்வேறு திட்டங்கள் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதால், மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து சட்டமன்றத்தில் நிகழும் தமிழக பட்ஜெட் நிகழ்வை மாநிலம் முழுவதும் 936 இடங்களில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இந்த நிலையில், தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

Tags:    

Similar News