தமிழ்நாடு
அனைவருக்கும் நீதி, சமத்துவம், கண்ணியத்தை உறுதி செய்யும் அரசியலமைப்பை போற்றுவோம்- முதலமைச்சர் வாழ்த்து
- முற்போக்குடன் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்ற நமது கடமையை குடியரசு தினம் நினைவூட்டுகிறது.
- குடியரசு தின விழாவில் ஒவ்வொருவர் இதயத்திலும் நம்பிக்கையும் நல்நோக்கங்கள் நிரம்பட்டும்.
இந்தியாவின் 76-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
குடியரசு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அனைவருக்கும் நீதி, சமத்துவம், கண்ணியத்தை உறுதி செய்யும் அரசியலமைப்பை போற்றுவோம்.
முற்போக்குடன் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்ற நமது கடமையை குடியரசு தினம் நினைவூட்டுகிறது.
குடியரசு தின விழாவில் ஒவ்வொருவர் இதயத்திலும் நம்பிக்கையும் நல்நோக்கங்கள் நிரம்பட்டும் என்று தெரிவித்துள்ளார்.