மாமல்லபுரத்தில் தற்காலிக குடில் அமைத்து வாழும் இருளர்கள்- குடியரசு தினத்தில் கோரிக்கை
- சுதந்திர தினத்திற்குள் தங்களுக்கு அத்தியாவசிய வாழ்வாதார குடியுரிமை வேண்டும்.
- மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், சமூக ஆர்வலர் மேத்யு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கடற்கரை கோயில் தென்பகுதி கடலோரத்தில் பல ஆண்டுகளாக 80-க்கும் மேற்பட்ட இருளர்கள் தற்காலிக குடில் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு குடியிருப்பு வசதி, ஜாதி சான்றிதழ், ரேஷன் கார்டு, பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய வசதிகள் இன்றி குடும்பத்துடன் பாதுகாப்பற்ற நிலையில் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் இன்று முதல் முறையாக 76வது குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில், அனைத்து குடில் குடியிருப்பு வாசிகளும் ஒன்று சேர்ந்து அப்பகுதியில் தேசியக்கொடி ஏற்றினர்.
பின்னர் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தினத்திற்குள் தங்களுக்கு அத்தியாவசிய வாழ்வாதார குடியுரிமை வசதிகள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுதிமொழி ஏற்றனர்.
மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், சமூக ஆர்வலர் மேத்யு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.