கலைஞர் நிறைந்திருக்கும் இடமெல்லாம் ஹனிபாவும் இருப்பார்!- மு.க.ஸ்டாலின் புகழாரம்
- “இசைமுரசு” ஹனிபா அவர்கள் காலங்கள் கடந்து வாழ்வார்!
- இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனிபா நூற்றாண்டு பிறந்தநாளை ஒட்டி அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அவரது பாடல் குறுந்தகட்டினையும் வெளியிட்டார்.
திமுக தலைவiரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கழகத்தின் கம்பீரக் குரல் "இசைமுரசு" நாகூர் ஹனிபா அவர்களின் நூற்றாண்டில் அவரைப் போற்றுவோம்! எல்லோரும் கொண்டாடுவோம்!
தலைவர் கலைஞரின் நண்பரும் - ஆருயிர்ச் சகோதரருமான "இசைமுரசு" ஹனிபா அவர்கள் காலங்கள் கடந்து வாழ்வார்! கலைஞர் நிறைந்திருக்கும் இடமெல்லாம் ஹனிபாவும் இருப்பார்! என்று தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலத்தில் இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனிபா நூற்றாண்டு பிறந்தநாளை ஒட்டி அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அவரது பாடல் குறுந்தகட்டினையும் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் துரைமுருகன், ஆ.ராசா எம்.பி., அமைப்பு செயலாளர் ஆர் .எஸ். பாரதி,. டி.கே.எஸ் இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, எஸ். ஆஸ்டின், தாயகம் கவி எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர் சிற்றரசு, திரைப்பட இயக்குனர் கஸ்தூரிராஜா, யுகபாரதி, சுரேஷ் காமாட்சி, சி.எஸ். சாம், மீரா ஆகியோர் பங்கேற்றனர்.