சனாதன சக்திகள் வலுப்பெற கூடாது என்பதால் திமுக கூட்டணியில் நீடிக்க விரும்புகிறோம்- திருமாவளவன்
- எங்களின் கவலை அதிமுக பலவீனப்பட்டால் அந்த இடத்தில் பாஜக வந்து அமர்ந்துவிடும் என்பது தான்.
- திமுக தேர்தல் கட்சி, ஆண்ட கட்சி, ஆளுகின்ற ஆட்சி அதை விமர்சிக்கலாம், விமர்சிக்காமல் இருக்க முடியாது.
சென்னையில் நடைபெற்ற 'என் பெயர் அம்பேத்கர்' என்ற நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்துக்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
திராவிட கட்சிகளுடன் முரண்பாடு, மாறுபட்ட கருத்துக்கள், விமர்சனங்கள் எங்களுக்கும் உண்டு.
ஆனால், திராவிட கட்சிகளை பலவீனப்படுத்திவிட்டு சனாதன கட்சிகள் உள்ளே வர அனுமதிக்க முடியாது.
அதிமுக பாஜகவை விட்டு வெளியே வந்தால் தான் எங்களை தற்காத்துக் கொள்ள முடியும் என ஏன் சொல்கிறோம் என புரியாமல் அவதூறு பரப்புகிறார்கள்.
எங்களின் கவலை அதிமுக பலவீனப்பட்டால் அந்த இடத்தில் பாஜக வந்து அமர்ந்துவிடும் என்பது தான்.
திமுக தேர்தல் கட்சி, ஆண்ட கட்சி, ஆளுகின்ற ஆட்சி அதை விமர்சிக்கலாம், விமர்சிக்காமல் இருக்க முடியாது.
திமுகவை விமர்சிப்பது என்ற போர்வையில் ஒட்டுமொத்த திராவிட அரசியல் சித்தாந்தத்தையே விமர்சிப்பது ஆபத்தானது.
எந்த பதவிக்கும் ஆசைப்படாமல், எதிர்பார்க்காமல் செயல்பட்டு வருகிறோம்.
திமுகவுக்கு முட்டு கொடுக்கிறீர்களா என்று கேட்கிறார்கள், திமுக திராவிட அரசியலை பேசுகின்ற ஒரு அரசியல் கட்சி.
திராவிட அரசியல் என்பது திமுக அரசியலோடு மட்டுமே சுருங்கி விடக் கூடியது அல்ல.
திராவிட அரசியல் என்பது ஒரு நொடிய பாரம்பரியம் உள்ள ஆரிய எதிர்ப்பு அரசியல். அதனால்தான் என்ன பாதிப்பு, விமர்சனங்கள் வந்தாலும் திமுக கூட்டணியில் விசிக நீடிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.