அணிகள் இணைப்பிற்காக 3 முக்கிய கோவில்களில் வழிபாடு செய்த ஓ.பி.எஸ்.
- எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றிருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் 3 முக்கிய கோவில்களில் வழிபாடு செய்து உள்ளார்.
- ஓ.பன்னீர்செல்வம் திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், பாடி சிவன் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில்களில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் நேற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். சந்திப்பின்போது, பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை விவகாரம் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக தெரிகிறது.
இந்நிலையில் அ.தி.மு.க.வில் அணிகள் இணைப்பிற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று 3 முக்கிய கோவில்களில் வழிபாடு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றிருந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் 3 முக்கிய கோவில்களில் வழிபாடு செய்து உள்ளார்.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு முன்னரே தெரியும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஓ.பன்னீர்செல்வம் திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், பாடி சிவன் கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில்களில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
இன்று காலை செய்தியாளர்களின் கேள்விக்கு எல்லாம் நன்மைக்கே என ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.