நெல்லையில் ஓய்வுபெற்ற SI கொலை வழக்கு குற்றவாளியை துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தது காவல்துறை
- ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி நெல்லையில் நேற்று வெட்டி படுகொலை
- இந்த கொலை சம்பவத்தில் 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி நெல்லையில் நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பட்டபகலில் நிகழ்ந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த கொலை தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனிடையே, ஜாகிர் உசேன் உயிரோடு இருந்தபோது தனது பேஸ்புக் பக்கத்தில் 'கிருஷ்ணமூர்த்தி என்கிற தெளபிக்' என்பவரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ஓய்வுபெற்ற காவலர் ஜாகிர் உசேன் கொலை வழக்கு குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தி என்கிற தெளபிக்கை துப்பாக்கிச்சூடு நடத்தி காவல்துறை பிடித்தது.
நெல்லை ரெட்டியார்ப்பட்டியில் பதுங்கியிருந்த குற்றவாளி முகமது தௌபிக் பிடிக்கச்சென்ற போது தலைமைக்காவலர் ஆனந்தை அவர் அரிவாளால் வெட்டமுயன்றதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து கிருஷ்ண மூர்த்தியை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.