தமிழ்நாடு

பாஜக நிர்வாகி நினைவஞ்சலிக்கு செல்ல அனுமதி மறுப்பு- நாங்கள் என்ன பயங்கரவாதிகளா?- எச்.ராஜா ஆவேசம்

Published On 2025-03-19 16:55 IST   |   Update On 2025-03-19 16:56:00 IST
  • 3 கார்களில் கட்சியினருடன் வந்த எச்.ராஜாவை இளையான்குடி போலீசார் தடுத்து நிறுத்தினர்.
  • எச்.ராஜா இளையான்குடி காவல் ஆய்வாளர் மணிகண்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ராமநாதபுரம் பரமக்குடிக்கு பாஜக நிர்வாகி நினைவஞ்சலிக்கு சென்ற எச்.ராஜாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

3 கார்களில் கட்சியினருடன் வந்த எச்.ராஜாவை இளையான்குடி போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த எச்.ராஜா இளையான்குடி காவல் ஆய்வாளர் மணிகண்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது, நாங்கள் என்ன பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தர்களா ? எதற்கு எங்களை தடுக்குறீர்கள் என்று எச்.ராஜா ஆவேசமாக கூறினார்.

இதைதொடர்ந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து எச்.ராஜாவை செல்ல போலீசார் அனுமதித்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News