தமிழ்நாடு
கோவை ஜெயிலில் விசாரணை கைதி உயிரிழப்பு
- கணேசன் அடிதடி வழக்கில் கைதாகி கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கபட்டு இருந்தார்.
- கணேசனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கோவை:
திண்டுக்கல் மாவட்டம் தசரா பட்டியை சேர்ந்த கணேசன் (46) என்பவர் உடுமலையில் நடந்த அடிதடி வழக்கில் கைதாகி கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கபட்டு இருந்தார்.
இன்று காலை அவர் அடைக்கப்பட்டு இருந்த ஜெயில் அறையில் அவர் மயங்கி கிடந்தார். சிறைகாவலர்கள் இதுகுறித்து கோவை மத்திய சிறை ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் உடனடியாக வந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.